/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையத்தில் குடிநீர் கேட்டு மறியல்
/
ராஜபாளையத்தில் குடிநீர் கேட்டு மறியல்
ADDED : ஜூலை 17, 2025 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை முறையாக இல்லாததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி அம்பேத்கர் நகரில் பொம்மக்கா கோயில் தெரு குடியிருப்புகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் முறையாக குடிநீர் சப்ளை இல்லை. 30-க்கும் அதிகமான பெண்கள் காலி குடங்களுடன் தென்றல் நகர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமையிலான போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.