ADDED : ஜூலை 07, 2026 04:16 AM

அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சியில் வடக்கு தெரு, நீராவி தெருவில் 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை. புழக்கத்திற்கும் தண்ணீர் இல்லை.
ஊராட்சியில் பல முறை கூறியும் நடவடிக்கை இல்லாததால் நேற்று காலை 10:00 மணிக்கு பாலையம்பட்டி -மதுரை ரோட்டில் காலி குடங்களுடன் மக்கள் மறியல் செய்தனர்.
டவுன் எஸ்ஐ., முத்துக்குமார், வி.ஏ.ஓ., சூரியமூர்த்தி, ஊராட்சி செயலர் கந்தன் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 2 நாட்களுக்குள் உடைந்த குழாய்கள் சரி செய்யப்பட்டு குடிநீர் சீராக வழங்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து மறியலை கைவிட்டனர்.
