/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதிய நல்லதங்காள் சிலையை வைத்து வழிபட அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்
/
புதிய நல்லதங்காள் சிலையை வைத்து வழிபட அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்
புதிய நல்லதங்காள் சிலையை வைத்து வழிபட அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்
புதிய நல்லதங்காள் சிலையை வைத்து வழிபட அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 06, 2025 03:31 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே அர்ச்சனாபுரத்தில் கிராம மக்கள் சார்பில் செய்யப்பட்டுள்ள புதிய நல்லதங்காள் சிலையை வைத்து வழிபடவும், அதற்கு கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலைத்துறை அனுமதி வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகத்தில் அண்ணன், தங்கை கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த அர்ச்சனாபுரம் நல்லதங்காள் கோயில் சிலை ஜனவரி 26 அன்று கோயில் கருவறையின் கதவுகள் உடைக்கப்பட்டு சிலை உடைந்து கிடந்தது. வத்திராயிருப்பு போலீசார் 5 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் அர்ச்சனாபுரம் மக்கள் சார்பில் செய்யப்பட்ட நல்லதங்காள் சிலையை கோயிலில் வைத்து வழிபடவும், கும்பாபிஷேகம் நடத்தவும் அறநிலையத்துறை அனுமதிக்க வேண்டுமென கோரி நேற்று முத்தாலம்மன் திடலில் 300-க்கும் மேற்பட்ட மக்கள், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கோயில் ஆய்வாளர் முத்து மணிகண்டன் கூறுகையில், அறநிலையத்துறை சார்பில் புதிய நல்லதங்காள் சிலை நிறுவப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.