ADDED : மார் 16, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் ரோடு மறியல் செய்தனர்.
அருப்புக்கோட்டை அருகே குறிஞ்சாக்குளம் கிராம மக்கள் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்கள் கிராமத்தில் 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை என புகார் தெரிவித்தனர்.
அங்கு அதிகாரிகள் இல்லாததால்,அங்கிருந்து மதுரை ரோட்டிற்கு சென்று ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.
தகவல் அறிந்த டி.எஸ்.பி., ஜெகநாதன் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.

