ADDED : செப் 27, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் வங்கி ஊழியர்கள் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு ஆடை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
ராஜபாளையத்தில் வங்கி ஊழியர்கள் சனிக்கிழமை விடுமுறை தினமாக மாற்றக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 28,29, 30 மூன்று தினங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்டேட் பேங்க் முன்பு சங்க செயலாளர் ஹரி தலைமையில் விளக்க கூட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் நலனை கருதி ஞாயிற்றுக்கிழமை வங்கி செயல்படும் என தெரிவித்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு ஆடை அணிந்து வங்கிப் பணியில் ஈடுபட்டனர்.
