/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுடுகாட்டுக்கு பாதை கேட்டு மூதாட்டி உடலுடன் போராட்டம்
/
சுடுகாட்டுக்கு பாதை கேட்டு மூதாட்டி உடலுடன் போராட்டம்
சுடுகாட்டுக்கு பாதை கேட்டு மூதாட்டி உடலுடன் போராட்டம்
சுடுகாட்டுக்கு பாதை கேட்டு மூதாட்டி உடலுடன் போராட்டம்
ADDED : ஆக 28, 2025 04:27 AM
சாத்துார் : சாத்துார் அருகே கே.சொக்கலிங்கபுரத்தில் சுடுகாட்டுக்கு செல்ல பாதை கேட்டு மூதாட்டி உடலுடன் மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
கே.சொக்கலிங்க புரத்தைச் சேர்ந்தவர் மூக்கம்மாள், 70.வயது மூப்பு காரணமாக காலமானார். அவ்வூரில் உள்ள சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை தனியார் தங்களுக்கு சொந்தம் என வேலி அமைத்து மறித்து உள்ளனர்.
இதனால் மூதாட்டி உடலுடன் அப்பகுதி மக்கள் பாதையை திறந்து விடக் கூறி போராட் டத்தில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி நாகராஜன், தாசில்தார் ராஜாமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து வழக்கமாக சுடுகாட்டிற்கு செல்லும் பாதை வழியாக மூதாட்டி உடல் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. போலீசார் அப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.