
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி : திருச்சுழியில் தி.மு.க., அரசை கண்டித்து இந்து இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாட்டில் தலை விரித்தாடும் போதை பொருட்களை கட்டுப்படுத்த தவறியது, போதை வழக்கில் சிக்கிய தி.மு.க., நிர்வாகி ஜாபர் சாதிக்கை கைது செய்ய வலியுறுத்தியும் நடந்த ஆர்பாட்டத்திற்கு நரிக்குடி ஒன்றிய செயலாளர் அழகர் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் பிரபு, ஆர்.எஸ்.எஸ்., விஸ்தாரக்கை சேர்ந்த விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். மாநில இணை அமைப்பாளர் பொன்னையா பேசினார். திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி ஒன்றியங்களைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர், பாஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

