UPDATED : அக் 14, 2026 07:18 PM
ADDED : அக் 14, 2026 07:14 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்திய தொழிற்சங்கம், நெசவாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கைத்தறி நெசவாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இ.கம்யூ.,முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னு பாண்டியன், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். திரளான நெசவாளர்கள் பங்கேற்றனர். நகர செயலாளர் மூர்த்தி நன்றி கூறினார்.
