நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 2381 பேருக்கு ரூ.22.24 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு வழங்கினர்.
இதில் கலெக்டர் சுகபுத்ரா, எம்.பி., ராணி, எம்.எல்.ஏ., சீனிவாசன், மேயர் சங்கீதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ஜீவா, நகராட்சி தலைவர் மாதவன், ஸ்ரீவில்லிப்புத்துார் சரகர் துணைப்பதிவாளர் வீரபாண்டி உள்பட பலர் பங்கேற்றனர்.

