/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ.73.92 கோடிக்கு உதவிகள் தொழிலாளர்களுக்கு வழங்கல்
/
ரூ.73.92 கோடிக்கு உதவிகள் தொழிலாளர்களுக்கு வழங்கல்
ரூ.73.92 கோடிக்கு உதவிகள் தொழிலாளர்களுக்கு வழங்கல்
ரூ.73.92 கோடிக்கு உதவிகள் தொழிலாளர்களுக்கு வழங்கல்
ADDED : ஜூன் 11, 2025 07:14 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 98 ஆயிரத்து 626 தொழிலாளர்களுக்கு ரூ.73.92 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் தெரிவித்தார்.
மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 10,471 பேருக்கு ஓய்வூதியம், 85,483 பேருக்கு கல்வி உதவித்தொகை, 1324 பேருக்கு இயற்கை மரண நிதி உதவி, திருமணம், மகப்பேறு உள்ளிட்ட இதர நலத்திட்ட உதவிகள் சேர்த்து ரூ.73.92 கோடியில் மொத்தம் 98, 626 தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே அதிக அளவில் பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. பட்டாசு, தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் இ.எஸ்.ஐ., பி.எப்., பிடித்தம் செய்யப்படாத அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் மூலம் 16 ஆயிரத்து 595 பேருக்கு ரூ.10.95 கோடியில் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.
பெண் ஆட்டோ டிரuவருக்கு சொந்தமாக ஆட்டோ வாங்க மானியம் வழங்கும் திட்டத்தில் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.