/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நடமாடும் விற்பனை வண்டிகள் வழங்கல்
/
நடமாடும் விற்பனை வண்டிகள் வழங்கல்
ADDED : ஆக 26, 2025 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் தோட்டக்கலைத்துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்தில் 50 சதவீத மானியத்துடன் கூடிய நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகளை கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார்.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைச் சந்தைப்படுத்த புதிய வழிகளை உருவாக்குதல், சில்லரை விற்பனையை மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு நேரடியாக வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கம். தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அம்ச வேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.