ADDED : மார் 13, 2024 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே கன்னிச்சேரி புதுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு போஷன் பக்வாடா என்ற கர்ப்பகால பராமரிப்பு, பச்சிளம் குழந்தைகளுக்கான உணவூட்டும் முறைகள் குறித்த விழிப்புணர்வு, கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
விருதுநகர் துணை சுகாதார இயக்குநர் யசோதமணி, மாவட்ட திட்ட அலுவலர் ஹேமலதா, குழந்தைகள் நல மருத்துவர் பிரியங்கா, வட்டார மருத்துவ அலுவலர் ஆரோக்கிய ரூபன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

