ADDED : மார் 18, 2025 06:36 AM
விருதுநகர்: விருதுநகரில் நடந்த குறைதீர் கூட்டத்தில்நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 65 பேருக்கு தலா ரூ.6800வீதம் ரூ.4.42 லட்சத்தில் தையல் இயந்திரங்களையும், பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ராஜபாளையம் சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த ஜோதிமுத்து மகன் காந்தி பாண்டி, நீர்நிலை விபத்தில் இறந்ததால் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் நிவாரண தொகை காசோலையும், மாவட்ட தொழில் மையம் சார்பில், திருத்தங்கலைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கு அம்பேத்கர் தொழில் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டு ரூ.3.57 லட்சம் கடன் வழங்கப்பட்டு, அதற்கான ரூ.1.27 லட்சம் மானியத்தொகை,பாலவனத்தத்தைச் சேர்ந்த வெங்கடேஷனுக்கு இளைஞர் வேலைவாயப்பு உருவாக்கும் திட்டத்தில் ரூ.5 லட்சம் கடன் வழங்கப்பட்டு, அதில் ரூ.1.25 லட்சம் மானியத்தொகை என உதவிகளை கலெக்டர் ஜெயசீலன்வழங்கினார்.
டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் காளிமுத்து பங்கேற்றனர்.