/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பி.எஸ்.ஆர்., பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு வளாக தேர்வு
/
பி.எஸ்.ஆர்., பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு வளாக தேர்வு
பி.எஸ்.ஆர்., பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு வளாக தேர்வு
பி.எஸ்.ஆர்., பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு வளாக தேர்வு
ADDED : பிப் 13, 2025 06:28 AM

சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்., பாலிடெக்னிக் கல்லுாரியில் கோயம்புத்துார் எல் அண்ட் டி நிறுவனம் சார்பில் இறுதி ஆண்டு படிக்கும் மின்னியல் மற்றும் இயந்திரவியல் துறை மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வளாகத் தேர்வு நடந்தது.
வளாகத் தேர்வில் எல் அண்ட் டி நிறுவனம் மனித வள மேம்பாட்டு அதிகாரி தினேஷ்குமார் பேசினார். வளாகத் தேர்வில் பல்வேறு பாலிடெக்னிக் கல்லுாரிகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 48 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பணி நியமனம் பெற்ற மாணவர்களை கல்லுாரி தாளாளர் சோலைசாமி, இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முதல்வர் ஸ்ரீதர், பேராசிரியர்கள் பாராட்டினர்.