/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில்வே ஸ்டேஷன் வந்து செல்ல டவுன் பஸ் வசதி வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
/
ரயில்வே ஸ்டேஷன் வந்து செல்ல டவுன் பஸ் வசதி வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
ரயில்வே ஸ்டேஷன் வந்து செல்ல டவுன் பஸ் வசதி வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
ரயில்வே ஸ்டேஷன் வந்து செல்ல டவுன் பஸ் வசதி வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
ADDED : நவ 07, 2025 03:33 AM
மாவட்டத்தில் ரயில் பயணம் மேற்கோள்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.
ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன்கள் பஸ் போக்குவரத்து வழித்தடத்தின் அருகில் அமைந்துள்ளதால் அங்கு அதிக அளவில் பயணிகள் வருகின்றனர். போதிய பஸ் வசதி இல்லாததால் ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடியில் குறைந்த அளவு பயணிகள் வரு கின்றனர்.
இதற்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு மக்கள் எளிதில் வந்து செல்ல போதிய அளவிற்கு அரசு டவுன் பஸ்களோ, மினி பஸ் வசதியோ இல்லாததே காரணமாகும். ஆட்டோக்களில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ. 120 வரை வாங்குகின்றனர்.
இரவு நேரங்களில் ரூ. 200 வரை வாங்குகின்ற னர். இதனால் ஸ்ரீவில்லி புத்துார், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் புதிய விதிப்படி 25 கிலோமீட்டர் தூரம் மினி பஸ் இயங்கலாம் என அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் தற்போது பல வழித் தடங்களில் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீவில்லி புத்துார், சிவகாசி, திருச்சுழி, நரிக்குடி, விருதுநகர் போன்ற ரயில்வே ஸ்டேஷனுக்கு மினி பஸ் வந்து செல்ல வேண்டுமெனில் ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். அதற்கு ஒரு ஆண்டு பார்க்கிங் கட்டணம் செலுத்தினால் மட்டுமே ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கும் என்பது விதி.
அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து செல்ல அனுமதி கோரி மினிபஸ் உரிமையாளர்கள் விண்ணப்பித்து பல மாதங்கள் ஆன நிலையில் இன்னும் ரயில்வே நிர்வாகம் அனுமதி கொடுக்காமல் காலதாமதம் செய்து வருகிறது. இதனால் ரயில்வே துறைக்கு வருவாய் குறைவு ஏற்பட்டு வருகிறது.
மேலும் அதிக கட் டணம் கொடுத்து ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய சிரமத்திற்கு மக்களை ரயில்வே நிர் வாகம் ஆளாக்கிவருகிறது. இதனால் மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்தின் மீது விருதுநகர் மாவட்ட மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, இனிமேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

