/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நாலூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
/
நாலூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
ADDED : பிப் 15, 2024 04:41 AM
திருச்சுழி: திருச்சுழி அருகே நாலூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
இதில், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை, இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவை, ஓய்வூதிய தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதிய தொகை, இயற்கை மரணம், ஈமை கிரியை உதவி தொகை, தோட்டக்கலை துறை மூலம் உதவிகள், மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் என பல்வேறு நல திட்டங்களை கலெக்டர் வழங்கினார்.
துணை கலெக்டர் அனிதா, ஆர்.டி.ஓ., வள்ளிக் கண்ணு மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.---

