ADDED : அக் 07, 2024 04:43 AM
அ நிறம் | அளவு
நரிக்குடி: நரிக்குடி இருஞ்சிறையில் சாஸ்தார் குஞ்சரமுடையார் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் பிராமணர் பூஜை நடந்தது. யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.
சுவாமிக்கு விபூதி, சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சர்வ அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. அன்னதானம் நடந்தது. இருஞ்சிறை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
