/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருவண்ணாமலையில் புரட்டாசி மூன்றாம் சனி
/
திருவண்ணாமலையில் புரட்டாசி மூன்றாம் சனி
ADDED : அக் 02, 2025 11:11 PM
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு நாளை அதிகாலை 2:00 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன்படி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், விஸ்வரூப பூஜை நடக்கிறது. இதனையடுத்து ராஜ அலங்காரத்தில் எழுந்தருளும் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். மாலை 4:00 மணிக்கு பெருமாள் கருட சேவை கிரிவலம் நடக்கிறது.
ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.
வழக்கத்தை விட மிகவும் அதிக அளவில் பக்தர்கள் வரும் நிலையில் மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.