/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு ஓரத்தில் தடுப்புச்சுவர் இல்லாத குவாரி பள்ளங்கள்
/
ரோடு ஓரத்தில் தடுப்புச்சுவர் இல்லாத குவாரி பள்ளங்கள்
ரோடு ஓரத்தில் தடுப்புச்சுவர் இல்லாத குவாரி பள்ளங்கள்
ரோடு ஓரத்தில் தடுப்புச்சுவர் இல்லாத குவாரி பள்ளங்கள்
ADDED : மார் 14, 2024 03:09 AM

திருச்சுழி: திருச்சுழி அருகேமீனாட்சிபுரம் செல்லும் ரோட்டில் கல்குவாரி பள்ளம் தடுப்புச் சுவர் இல்லாமல் உள்ளதால் மக்கள் ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர்.
திருச்சுழி அருகே கல்லூரணியிலிருந்து ஆலடிபட்டி, மீனாட்சிபுரம் செல்லும் ரோடு அருகில் 20க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. ரோடு ஓரங்களில் உள்ள கல் குவாரிகளில் கற்கள் எடுக்கப்பட்ட பின் மெகா பள்ளமாக உள்ளது.
இவற்றைச் சுற்றி தடுப்புச்சுவரோ, பள்ளத்தை மூடவோ எந்தவித நடவடிக்கை இல்லாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் இரவு நேரங்களில் இந்த ரோடு வழியாக செல்பவர்கள் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது.
ரோடும் அகலமாக இல்லாமல் குறுகலாக இருப்பதாலும், ரோடு ஓரத்தில் பள்ளமாக இருப்பதாலும் ஒதுங்க முடியாமலும் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் உள்ளது. இந்த ஆபத்தான ரோட்டில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
ரோடு ஓரங்களில் உள்ள பள்ளங்களை சுற்றி தடுப்புச்சுவர் கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

