/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முகமூடி கொள்ளையர் தலைவனை தேடும் பணி தீவிரம்: பணத்திற்காக கொள்ளையில் விழுந்த இளைஞர்கள்
/
முகமூடி கொள்ளையர் தலைவனை தேடும் பணி தீவிரம்: பணத்திற்காக கொள்ளையில் விழுந்த இளைஞர்கள்
முகமூடி கொள்ளையர் தலைவனை தேடும் பணி தீவிரம்: பணத்திற்காக கொள்ளையில் விழுந்த இளைஞர்கள்
முகமூடி கொள்ளையர் தலைவனை தேடும் பணி தீவிரம்: பணத்திற்காக கொள்ளையில் விழுந்த இளைஞர்கள்
ADDED : ஜூன் 23, 2024 03:25 AM
ராஜபாளையத்தில் தம்பதியை கட்டி வைத்து பிப் 24 ல் முகமூடி கொள்ளையர்கள் 56 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கில் தேனி பெரியகுளத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார், அருண்குமாரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் கொள்ளையடித்த பொருட்களை மறைப்பதற்கும், விற்பதற்கும் உடந்தையாக இருந்த லட்சுமி, அனிதாபிரியா, நாக ஜோதி, சீனிதாய், மோகன், மகாலட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான விசாரணையில் போலீசார் கூறியதாவது:
இந்த முகமூடி கும்பலில் மொத்தம் 17 பேர் உள்ளனர். இவர்கள் கொள்ளையில் ஈடுபடும் பகுதிகளில் உள்ள வீடுகள், தனியாக வசிப்பவர்கள், சி.சி.டி.வி., கேமராக்கள், நாய்கள் என அனைத்து விவரங்களையும் நோட்டமிட்டு தெரிந்து கொள்கின்றனர். அதன் பின் கொள்ளையை அரங்கேற்றி தப்பிச் செல்கின்றனர். இந்த கும்பலுக்கு மூளையாக இருப்பவர் தேனியைச் சேர்ந்த மூர்த்தி. இவர் போலீசார் தன்னை நெருங்கி விடக்கூடாது என்பதற்காக அலைபேசி உபயோகிப்பது கிடையாது.
இதில் ஐ.டி., ஊழியர்கள், வக்கீல், பட்டதாரி இளைஞர்கள், பெண்கள் பலரும் உள்ளனர். எளிதாக சம்பாதித்து, சிக்கிரமாக செட்டில் ஆகிவிடலாம் என்ற ஆசை வார்த்தைகளை இளைஞர்களிடம் கூறி ஆட்களை சேர்கின்றனர். இவர்களுடன் கொள்ளையில் ஈடுபடும் மூர்த்தி, நகைகளை அந்தந்த பகுதிகளில் தெரிந்தவர்களின் உதவியோடு மறைத்து விற்பனை செய்து விடுகிறார்.
இந்த கும்பல் தமிழகம் முழுவதும் 60 க்கும் மேற்பட்ட பகுதிகளில் கொள்ளை அடித்த நகை மட்டும் 2500 பவுன் இருக்கலாம். இதன் மூலம் கிடைத்த பணத்தில் ராஜபாளையத்தில் ரூ. 4 கோடி மதிப்பில் ஸ்பின்னிங் மில் வாங்கியுள்ளனர். இந்த பத்திரத்தை போலீசார் கைப்பற்றினர். மேலும் மதுரையில் ரூ. 34 கோடியில் அப்பார்ட்மென்ட் வாங்கி இருப்பதாக தெரிகிறது. இதற்கான ஆவணங்கள் எங்கே வைத்துள்ளனர் என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த கொள்ளையில் ஈடுபட்ட மற்றவர்கள் குறித்தும், கொள்ளையில் கிடைத்த நகைகள், பதுக்கி, விற்பனை செய்யப்பட்ட இடங்கள், அதன் மூலம் வாங்கிய சொத்து ஆவணங்கள் குறித்து தொடர் விசாரணை செய்யப்படுகிறது, என்றனர்.