ADDED : மார் 06, 2026 05:49 AM
அ நிறம் | அளவு
திருச்சுழி: திருச்சுழியில் காந்தி கஸ்தூரிபா உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு வினாடி வினா போட்டிகள் நடந்தது.
பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு அதிலிருந்து வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் வசந்தா முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை நிலைய எழுத்தர் ராஜா ராம் பாண்டியன், மெக்கானிக் முத்து மற்றும் ஆசிரியர்கள் செய்தனர்.
