நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: மல்லாங்கிணரில் உள்ள விருதுநகர் பி.எம்.கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கி மன அழுத்தத்தை குறைக்கும் பரீக்ஷா பே சர்ச்சா திட்டத்தின் கீழ் சென்னை மண்டல பி.எம். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் கமிஷனர் செந்தில் குமார் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி நடந்தது.
10 பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 60 வினாக்கள் கேட்கப்பட்டு அதற்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளிக்கும் வகையில் இந்த போட்டி அமைந்திருந்தது. போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற பள்ளிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் பொறுப்பு ஏ.ஜி ராஜேந்திரன் செய்திருந்தார்.

