கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஜன.28 வரை நீட்டிப்பு
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஜன.28 வரை நீட்டிப்பு
ADDED : ஜன 22, 2026 05:53 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கோமாரி நோயில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதற்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜன.18 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக ஜன. 28 வரை முகாம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பசு, எருமை இனங்களை கோமாரி நோயில் இருந்து பாதுகாக்கும் வகையில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கான 8வது சுற்று தடுப்பூசி முகாம் டிச. 29ல் துவங்கியது. இப்பணிகள் ஜன.18 வரை நடத்த திட்டமிடப்பட்டது.
மேலும் 1 லட்சத்து 45 ஆயிரத்து 700 பசு, எருமை இனங்களை கோமாரி நோயில் இருந்து காக்கும் வகையில் தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டம் மூலம் இம்முகாம் நடக்கிறது. மாவட்டத்தின் 82 கால்நடை மருந்தகங்கள், 6 கால்நடை மருத்துவமனைகளில் கோமாரி நோய்க்கான தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.
இதற்காக கால்நடை உதவி டாக்டர், கால்நடை ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 58 குழுக்கள் இம்முகாமிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1.40 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் விடுபட்ட மீதமுள்ள 5 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவற்காக ஜன. 28 வரை முகாம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
