/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
1.45 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஜூலை 2 முதல் துவக்கம்
/
1.45 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஜூலை 2 முதல் துவக்கம்
1.45 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஜூலை 2 முதல் துவக்கம்
1.45 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஜூலை 2 முதல் துவக்கம்
ADDED : ஜூன் 28, 2025 11:23 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1. 45 லட்சம் கால்நடைகளுக்கான இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஜூலை 2 முதல் ஜூலை 22 வரை நடக்கிறது என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
கோமாரி நோய் கலப்பின மாடுகளை அதிகமாக தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோய் வைரஸ் தொற்று பசு, எருமைகளை அதிகம் பாதிக்கிறது.
இதனால் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைதல், எருதுகளின் வேலை திறன் குறைதல், சினை பிடிப்பதில் தடை ஏற்படுதல், இளம் கன்றுகளில் இறப்பும் ஏற்படுகிறது. ஆனால் இறப்புகள் குறைவாக இருந்தாலும் பாதிப்புகள், பொருளாதார இழப்பு அதிகமாக இருக்கும்.
இந்த நச்சுயிரி மாட்டுக் கொட்டைகளில் 15 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். காற்று மூலமாக வேகமாக பரவும் தன்மை கொண்டது. நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் அதிக கால்நடைகளுக்கு நோய் பரவுகிறது.
தற்போது மாவட்டத்தில் உள்ள 82 கால்நடை மருந்தகங்கள், 6 கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை உதவி மருத்துவர், கால்நடை இன்ஸ்பெக்டர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் அடங்கிய 51 குழுக்கள் மூலமாக 1 லட்சத்து 45 ஆயிரத்து 700 பசு, எருமைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச தடுப்பூசி முகாம் ஜூலை 2 துவங்கி ஜூலை 22 வரை 21 நாட்கள் நடக்கிறது. நான்கு மாதத்திற்கு மேல் உள்ள கன்றுகளுக்கும், நிறை மாத சினை இல்லாத மாடுகளுக்கும் 6 மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.