UPDATED : செப் 29, 2026 10:53 PM
ADDED : செப் 29, 2026 08:54 PM
ராஜபாளையம்:ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் விஜய் ஆண்டறிக்கை, பொருளாளர் ஜெகத் சங்கர் நிதிநிலை வாசித்தனர். இணைச் செயலாளர் ஹரிசங்கர்,
ரயில்வே அமைச்சக ஆலோசனை குழு உறுப்பினர் ஸ்ரீமன் ராமச்சந்திர ராஜா விளக்கி பேசினர்.
கூட்டத்தில் ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனை இடைநிலை இயக்க முனையமாக தரம் உயர்த்துதல், 2 வது நடைமேடை முழுவதும் நிழற்குடை அமைத்தல். சோழபுரம் ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பணிகளை விரைவில் துவக்குதல். தாம்பரம்- தென்காசி பகல் நேர சிறப்பு ரயிலை மீண்டும் இயக்குதல், சிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி இயக்குதல். ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் ரிசர்வேஷன் கவுண்டரை பழையபடி காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை மாற்றல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணைத் தலைவர் ஜெகந்நாத ராஜா நன்றி கூறினார்.
