தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மழையால் பட்டாசு உற்பத்தி பாதிப்பு * பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு

மழையால் பட்டாசு உற்பத்தி பாதிப்பு * பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு

மழையால் பட்டாசு உற்பத்தி பாதிப்பு * பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு


ADDED : அக் 15, 2025 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2025 12:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி ஐந்து நாட்களே உள்ள நிலையில் அவ்வப்போது பெய்யும் மழையால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

இம்மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றியுள்ள பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. 4000 க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை கடைகள் உள்ளன. ஏற்கனவே மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த தீபாவளிக்கு பட்டாசு உற்பத்தி சதவீதம் குறைந்தது. மேலும் மக்கள் விரும்புகின்ற வெரைட்டி பட்டாசுகளையும் உற்பத்தி செய்ய முடியவில்லை. ஆனாலும் பட்டாசு உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வந்தன.

இந்நிலையில் தீபாவளிக்கு ஐந்து நாட்களே உள்ள நிலையில் சிவகாசி பகுதியில் அவ்வப்போது விட்டு விட்டு பெய்யும் மழையால் மீண்டும் பட்டாசு உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

பொதுவாக மாவட்டத்தில் தீபாவளிக்கு 3 நாட்கள் முன் வரை பட்டாசு உற்பத்தி தொடர்ந்து நடக்கும். ஆனால் அவ்வப்போது பெய்யும் மழையால் உற்பத்தி பணி பாதிக்கப்படுவதால் ஒரு சில ஆலைகள் முன்னதாகவே பட்டாசு உற்பத்தி பணியை நிறுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் மக்கள் விரும்பும் பட்டாசுகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும்.

பட்டாசு வியாபாரி ராஜேஷ் கூறியதாவது: மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உற்பத்தி சதவீதம் குறைந்துள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மக்கள் விரும்புகிற வெரைட்டி பட்டாசுகளை தயாரிக்க முடியவில்லை. அதிகாரிகள் ஆய்வினால் 100 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது விட்டு விட்டு மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் பட்டாசு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us