ADDED : ஏப் 05, 2026 08:05 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் மாலையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவிற்கு காணப்படுகிறது. காலை 9:00 மணி முதல் வெயிலின் தாக்கம் ஆரம்பிக்கும் நிலையில் நேரம் செல்ல செல்ல அதிகரித்து மாலை 5:00 மணி வரை மக்கள் சிரமப்படும் நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்ததால் பஸ் ஸ்டாண்ட் பஜார் வீதிகளில் நடந்து செல்வோம் மிகுந்த சிரமத்தில் ஆளாகினர். மாலை 4:30 மணிக்கு மழை பெய்து குளிர்ந்த நிலை ஏற்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
