/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி மார்க்கெட்டில் தேங்கும் மழை நீர் *வியாபாரிகள் மக்கள் அவதி
/
சிவகாசி மார்க்கெட்டில் தேங்கும் மழை நீர் *வியாபாரிகள் மக்கள் அவதி
சிவகாசி மார்க்கெட்டில் தேங்கும் மழை நீர் *வியாபாரிகள் மக்கள் அவதி
சிவகாசி மார்க்கெட்டில் தேங்கும் மழை நீர் *வியாபாரிகள் மக்கள் அவதி
ADDED : ஏப் 23, 2025 05:59 AM

சிவகாசி : சிவகாசி போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் காய்கறி மார்க்கெட் அருகே மழை நீர் தேங்கி நிற்பதால் வியாபாரிகள், மக்கள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் அண்ணா துரை காய்கறி மார்க்கெட், தவிர அம்மா உணவகம், பல்வேறு கடைகள் உள்ளன. இப்பகுதியில் ரோட்டை சீரமைக்கும்போது சமதளமாக இல்லாததால் சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் ரோட்டிலேயே தேங்கி விடுகின்றது. அருகிலேயே வாறுகால் வசதி இருந்தும் தண்ணீர் வெளியேற வழி இல்லை. வாகனங்கள் செல்லும் போது தண்ணீர் கடை, மக்கள் மீது தெறிக்கிறது. இதனால் வியாபாரிகள், கடைக்கு வருபவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்களை நிறுத்துவதிலும் சிரமம் ஏற்படுகின்றது. ரோட்டின் அருகிலேயே வாறுகால் வசதி இருந்தும் தண்ணீர் வெளியேறுவதற்கு வழி இல்லை. எனவே இப்பகுதியில் மழை நீர் தேங்காமல் வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.