/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அலட்சியத்தால் மழைநீர் வீண்! ஓடையை தூர்வாருவது அவசியமாகிறது
/
அலட்சியத்தால் மழைநீர் வீண்! ஓடையை தூர்வாருவது அவசியமாகிறது
அலட்சியத்தால் மழைநீர் வீண்! ஓடையை தூர்வாருவது அவசியமாகிறது
அலட்சியத்தால் மழைநீர் வீண்! ஓடையை தூர்வாருவது அவசியமாகிறது
ADDED : மே 22, 2024 07:39 AM
கோடை வெயில் பல நாட்களாக வெளுத்து வாங்கிய நிலையில், மாவட்டத்தில் கண்மாய்கள், ஊருணிகள், குளங்கள் வேகமாக வறண்டன. அரைகுறையாக கண்மாய்களில் இருந்த தண்ணீரும் கொளுத்தும் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஆவியாகி போனது. இந்நிலையில், பருவ மழை முன் கூட்டியே துவங்கி விட்டது.
ஆனால், பெய்கின்ற மழைநீர் முழுமையாக நீர்நிலைகளுக்கு செல்வதில்லை. கண்மாய்களும் நீரை சேகரம் செய்கிற அளவிற்கு பலம் இல்லை. மாவட்டத்தில் பெரும்பாலான கண்மாய் கரைகள் சேதமடைந்தும், பலமில்லாலும் உள்ளன. மடைகள் உடைந்து இருக்கின்ற நீரும் வெளியேறும் நிலையில் உள்ளது. மழைநீர் வரத்து ஒடைகளும் பராமரிப்பின்றி முட்புதர்கள் வளர்த்தும், கழிவுநீர் விடப்பட்டும் உள்ளது.
ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள ஓடை, எஸ்.பி.கே. கல்லூரி ரோடு, எம்.டி.ஆர்., நகர், திருச்சுழி ரோடு அரசு போக்குவரத்து டெப்போ பகுதிகள் வழியாக செல்லும் 4 கி.மீ., தூரம் உள்ள ஓடை தற்போது நகரில் வெளியேற்றப்படும் கழிவுநீர் விடப்பட்டும் மாசடைந்துள்ளது.
இந்த ஓடை வழியாகத்தான் தும்பை குளம் கண்மாய், பெரிய கண்மாய்களுக்கு மழைநீர் வரும். இந்த ஓடையை தூர்வாரி பராமரிக்காமல் விட்டதால், தற்போது நகரில் சுகாதார சீர்கேட்டை உருவாக்குவதோடு பெய்யக்கூடிய மழைநீர் சாக்கடை நீராக மாறி நோய் பரப்பும் அபாயம் உள்ளது.
ஆண்டிற்கு ஒரு முறையாவது ஓடையை தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அலட்சியத்தால் மழைநீர் வீணாகிறது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

