/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் --டூவீலர் ஸ்டாண்டாக மாறிய அவலம்
/
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் --டூவீலர் ஸ்டாண்டாக மாறிய அவலம்
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் --டூவீலர் ஸ்டாண்டாக மாறிய அவலம்
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் --டூவீலர் ஸ்டாண்டாக மாறிய அவலம்
ADDED : ஆக 15, 2025 02:22 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பித்து திறக்கப்பட்டு 75 நாள் கடந்தும் அடிப்படை வசதிகளின்றி மக்கள் தவிக்கின்றனர். இதனால் டூவீலர் ஸ்டாண்டாக மாறி வருகிறது.
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் ரூ.3.40 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு மே 29ல் திறக்கப்பட்டது. இதில் வணிக கடைகள், இரண்டு ஓட்டல்கள், பயணிகள் காத்திருப்பு அறை, புறக்காவல் நிலையம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் செயல்படும் என எதிர்பார்த்த நிலையில் ஒன்று கூட நடைமுறைக்கு வரவில்லை.
அவசர கதியில் திறக்கப்பட்ட நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில் 75 நாட்கள் கடந்தும் கழிப்பறை வசதி செய்யவில்லை. பல நேரங்களில் மகளிர் சுகாதார வளாகம் பூட்டப்பட்டு பெண்கள், மாணவிகள் இயற்கை உபாதைக்கு ஓட்டல்களை நாடும் அவலம் உள்ளது.
தற்போது வரை குடிநீர், போலீஸ் அவுட் போஸ்ட், பஸ்சுக்கான நேர அட்டவணை என எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இதனால் பலர் டூவீலர் நிறுத்தும் இடமாக மாற்றி வருகின்றனர். இதுகுறித்து குமார்: திறந்து 75 நாள் கடந்தும் அடிப்படை வசதிகளை கண்டுகொள்ள ஆள் இல்லை. கணக்கிற்காக நகராட்சியினரும் போலீசாரும் கூட்டம் போட்டு முடித்து விடுகின்றனர். சிசிடிவி கேமராவும் அமைக்கவில்லை.
மகளிர் சுகாதார வளாகம் பாதி நேரமும், மாற்றுத்திறனாளிகளுக்கு எப்போதும் பூட்டியே உள்ளது. வணிக கடைகள் திறக்காத நிலையில் பயணிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. டூவீலர் பார்க்கிங் இடமாக மாற்றி வைத்துள்ளனர்.

