/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தண்ணீர் குறைந்து வரும் ராஜபாளையம் நீர்த்தேக்கம்
/
தண்ணீர் குறைந்து வரும் ராஜபாளையம் நீர்த்தேக்கம்
ADDED : செப் 13, 2025 03:37 AM

ராஜபாளையம்,: ராஜபாளையம் நகருக்கு சப்ளை செய்யும் ஆறாவது மைல் குடிநீர் தேக்கம் கோடையின் தாக்கத்தால் 2 அடியாக வற்றி விட்டது. இதனால் கால்நடைகள் பறவைகள் சிரமத்திற்கு உள்ளாகின்றன.
ராஜபாளையம் நகர் பகுதி மக்களுக்கு ஆறாவது மைல் நகராட்சி குடிநீர் தேக்கம் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
மலைப்பகுதியில் சுமாராக மழை பெய்தாலும் ஆற்றில் பெருகும் நீரை தேக்கத்திற்கு திருப்பி தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
24 அடி உயரம் உள்ள நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு கருதி தற்போது 18 அடி உயரம் வரை மட்டும் தேக்கி வைக்கப்படுகிறது.
ராஜபாளையம் சுற்றுப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயிலால் நீர் மட்டம் 2 அடியாக குறைந்து விட்டது.
ஏற்கனவே வாரம் ஒரு முறை குடிநீர் சப்ளை நடைபெறும் நிலையில், நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள ஆழ்துளை குழாய், கிணறுகள், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட சப்ளையை வைத்து சமாளித்து வருகின்றனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள்: தற்போது 2 அடியாக தண்ணீர் வற்றிவிட்டது.
இவற்றை நம்பியுள்ள மேய்ச்சல் கால்நடைகள் பறவைகளுக்கு அதிக சிக்கல் ஏற்பட்டுள்ளது. நகர் பகுதி சப்ளைக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீரும், ஆழ்துளை கிணறுகள் சப்ளை கை கொடுக்கிறது.
ராஜபாளையத்தை பொருத்தவரை ஒரு மழை பெய்தாலும் குடிநீர் தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து தொடங்கிவிடும். தாமிரபரணி குடிநீர் சப்ளை இருப்பதால் கவலை இல்லை. இருப்பினும் மழையை எதிர்பார்த்து உள்ளோம்.