ADDED : மார் 11, 2024 05:11 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில்- - -வத்திராயிருப்பு மெயின்ரோட்டில் ராம்ஸ் கார்டன் திறப்பு விழா நடந்தது.
செந்தில் மணி, ஆசிஸ் பாஸ்கர், ஜோசிதா ராமமூர்த்தி வரவேற்றனர்.
உரிமையாளர் பாஸ்கர் கூறுகையில், கலசலிங்கம் பல்கலை அருகே உலகத்தரம் வாய்ந்த வீட்டு மனை பிரிவுகள் விற்பனை நேற்று முதல் துவங்கியது. எங்கள் மனைகளின் அருகே திருமங்கலம் -- ராஜபாளையம் நான்கு வழிச்சாலை, கலசலிங்கம் பல்கலை அமைந்துள்ளது.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது. மெயின் தார் சாலைகள் 40 அடி மற்றும் 33 அடி குறுக்குச் சாலைகள் கொண்டது. இதனை சுற்றிலும் சோலார் விளக்குகள் உள்ளது. மனைகள் வாஸ்து முறைப்படி அமைத்துள்ளோம். மனைப்பிரிவுகளை சுற்றிலும் விளையாட்டு மைதானங்கள் உள்ளன. வீட்டு மனைகள் வாங்கும் அனைவருக்கும் நல்ல முதலீடாகும், என்றார்.
விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன், வத்திராயிருப்பு யூனியன் சேர்மன் சிந்து முருகன், ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரி, தொழிலதிபர் மாயக்கண்ணன் பலர் பங்கேற்றனர். சிவசக்தி ரியல் எஸ்டேட் உரிமையாளர் மணி நன்றி கூறினார்.
