ADDED : பிப் 14, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: திருமங்கலம் அரசபட்டியை சேர்ந்தவர் கனகர்பாண்டி 29. இவர் விருதுநகர் துலுக்கப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் 36 மூடைகளில் 1800 கிலோ ரேஷன் அரிசியை சேகரித்து கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தார்.
குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து, அரிசி, டூவீலரை பறிமுதல் செய்தனர்.

