ADDED : டிச 11, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் மற்றும் போலீசார் சின்னக்காமன்பட்டியில் நேற்று மதியம் 12:30 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தினர்.
அதிலிருந்து இறங்கிய இருவர் தப்பி ஓடினர். அதிகாரிகள் சோதனை செய்து அதில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியையும் வேனையும் பறிமுதல் செய்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

