/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கலில் கட்டி ஏழு ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை
/
திருத்தங்கலில் கட்டி ஏழு ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை
திருத்தங்கலில் கட்டி ஏழு ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை
திருத்தங்கலில் கட்டி ஏழு ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை
ADDED : ஜன 29, 2025 07:46 AM

சிவகாசி, : சிவகாசி திருத்தங்கல் முத்துமாரி நகரில் 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரேஷன் கடை இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
திருத்தங்கல் முத்துமாரி நகரில் 1500 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் இரண்டு கிலோமீட்டர் துாரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு சிரமப்பட்டனர்.
எனவே இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக முத்துமாரி நகரில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் 7 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.ஆறு லட்சத்தில் ரேஷன் கடை கட்டப்பட்டது.
தொடர்ந்து அப்போதே திறப்பு விழாவும் நடத்தப்பட்டது. ஆனால் இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
இதனால் இப்பகுதி பெண்கள், முதியவர்கள் நீண்ட துாரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு தற்போது வரையிலும் சிரமப்படுகின்றனர்.
கட்டடத்தை சுற்றிலும் முட்புதர்கள் சூழ்ந்துள்ள நிலையில் கட்டடமும் சேதம் அடைந்து வருகின்றது.
எனவே கட்டடம் முழுமையாக சேதம் அடைவதற்குள் மக்களின் நலன் கருதி ரேஷன் கடையை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.