தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இட நெருக்கடியில் ரேஷன் கடை

 இட நெருக்கடியில் ரேஷன் கடை

 இட நெருக்கடியில் ரேஷன் கடை


ADDED : ஜூன் 07, 2026 02:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 02:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி : சிவகாசி ஆனையூர் ஊராட்சி முனீஸ் நகரில் இட நெருக்கடியில் தனியார் கட்டடத்தில் செயல்படும் ரேஷன் கடையால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே புதிய கட்டடம் கட்ட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசி ஆனையூர் ஊராட்சி முனீஸ் நகரில் 450 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சொசைட்டிக்கு சொந்தமான கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வந்தது. இந்தக் கட்டடம் சேதம் அடைந்த நிலையில் 7 ஆண்டுகளாக தனியார் கட்டடத்தில் வாடகைக்கு இயங்கி வருகின்றது.

இந்தக் கட்டம் இட நெருக்கடியாக இருப்பதால் ரேஷன் பொருட்களை வைப்பதற்கும், மக்கள் வாங்க வருவதற்கும் பெரிது சிரமப்படுகின்றனர். தவிர ரேஷன் பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் கடை அருகே வர வழியில்லாமல் மெயின் ரோட்டிலேயே நிறுத்தி பொருட்களை கொண்டு வர வேண்டி உள்ளது. எனவே ஏற்கனவே இயங்கி வந்த ரேஷன் கடை கட்டடத்தை இடித்து அங்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us