ADDED : ஏப் 25, 2025 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ரேஷன் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஐ.மாரிமுத்து, செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தனர். ரேஷனுக்கு தனித்துறை அமைப்பது, பொட்டலமாக வழங்குவது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும், வேலை நிறுத்தமும் நடந்தது. மாவட்டம் முழுவதும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 150 கடைகள் பூட்டப்பட்டது.

