/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முதல்வர் கோப்பை போட்டிக்கு பதிவு கால அவகாசம் நீட்டிப்பு
/
முதல்வர் கோப்பை போட்டிக்கு பதிவு கால அவகாசம் நீட்டிப்பு
முதல்வர் கோப்பை போட்டிக்கு பதிவு கால அவகாசம் நீட்டிப்பு
முதல்வர் கோப்பை போட்டிக்கு பதிவு கால அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஆக 19, 2025 12:35 AM
விருதுநகர்; விருதுநகரில் ஆக.22 முதல் நடக்கும் முதல்வர் கோப்பை போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆக. 22 முதல் செப். 12 வரை விருதுநகரில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், மக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடக்கிறது. தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2ம் பரிசாக ரூ.75 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் சிறப்பு மதிப்பெண்கள், சலுகைகள் பெற இயலும். பங்கேற்க விரும்புவோர் https://cmtrophy.sdat.in/https://sdat.tn.gov.in தளத்தில் ஆக. 20 இரவு 8:00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.