/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இளைஞரை தாக்கி ரீல்ஸ் வெளியிட்டது கொடூரம்: கார்த்தி எம்.பி., கண்டனம்
/
இளைஞரை தாக்கி ரீல்ஸ் வெளியிட்டது கொடூரம்: கார்த்தி எம்.பி., கண்டனம்
இளைஞரை தாக்கி ரீல்ஸ் வெளியிட்டது கொடூரம்: கார்த்தி எம்.பி., கண்டனம்
இளைஞரை தாக்கி ரீல்ஸ் வெளியிட்டது கொடூரம்: கார்த்தி எம்.பி., கண்டனம்
ADDED : டிச 31, 2025 05:08 AM
காரைக்குடி: ''வட மாநில இளைஞரை தாக்கி ரீல்ஸ் வெளியிட்டது கொடூரச்செயல். காவல்துறை இதுபோன்ற செயல்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்,'' என, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
காரைக்குடி கழனிவாசல் காளீஸ்வர கால்பந்து திடலில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 8 லட்சத்தில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து வைத்து எம்.பி., கார்த்தி கூறியதாவது: வட மாநில இளைஞரை தாக்கி ரீல்ஸ் எடுத்து பாட்டுடன் வெளியிட்டது கொடூரம். இந்த கலாசாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது தொடர்ந்தால் சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
நம்மை விட மாறுபட்டு இருப்பவர்கள் மீது வெறுப்புணர்வு வளர்ந்து வருகிறது. அரசியல் மூலம் உருவாகும் இந்த வெறுப்புணர்வை தடுத்து நிறுத்த வேண்டும். இது நம் சமுதாயத்தின் கடமை.
ஆசிரியர் போராட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அமைச்சரும் அரசும் தான் பதில் சொல்ல வேண்டும். போதைப்பொருட்கள் விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து போதைப்பொருட்கள் இந்தியாவிற்கு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் விழிப்புடன் இருந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழகத்திலிருந்து உத்தர பிரதேசத்திற்கு வாழ்வாதாரம் தேடி யாரும் போவதில்லை. அங்கிருந்து தான் இங்கு வருகிறார்கள். தமிழ்நாடு தான் வளர்ந்து உள்ளது. எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும், நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு என்று இளைஞர் பட்டாளம் உள்ளது. கூட்டம் சேருகிறது. ஆனால் அது ஓட்டாக மாறுமா, சீட்டாக மாறுமா என்று தெரியவில்லை. அக்கட்சிக்கு கட்டமைப்பு இல்லை. எனக்கு சுல்தானும் தெரியாது, சக்கரவர்த்தியும் தெரியாது. அதிகாரப்பூர்வமாக காங்., கட்சி தி.மு.க.,வுடன் இண்டி கூட்டணியில் உள்ளது என்றார்.

