நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் வச்சக்காரப்பட்டியில் கோட்டையூரில் இயங்கி வரும் சாய்நாத் பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் ஜன. 4ல் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் பலியாகி, ஒருவர் காயமடைந்தார்.
இதில் பலியான மீனாட்சி சுந்தரத்தின் மனைவி மரகத வள்ளி, நாகராஜ் மனைவி சித்ராதேவி, வேல்முருகன் மனைவி கிருஷ்ணவேணி, கண்ணன் மனைவி ராஜேஸ்வரி, சிவக்குமார் மனைவி மீனாட்சி ஆகியோருக்கு தலா ரூ.4 லட்சம், காமராஜ் மகன்கள் அருண்குமார் ரூ.2 லட்சம், கனிஷ் ரூ.1 லட்சம், வர்ஷா ரூ.1 லட்சம் என பலியானோர் வாரிசுதாரர்களுக்கு அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் நிவாரணம் வழங்கினார்.
காயமடைந்த முகமது சுதீனுக்கு, தாயார் ஜெரினா பேகத்திடம் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.
கலெக்டர் ஜெயசீலன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.