நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறக்கும் கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் பாண்டி, சின்னமாரிமுத்து, சம்பத்குமார், பவுன்ராஜ், கருப்பசாமி ஆகிய 5 தொழிலாளர்களின் பணியிட விபத்து மரணத்திற்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.25 லட்சமும், சாலை விபத்து மரணத்திற்கு சோணமுத்து என்ற தொழிலாளிக்கு ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் என மொத்தம் ரூ.27 லட்சத்து 5 ஆயிரத்திற்கான ஆணைகளை வாரிசுகளுக்கு கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார்.
தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் உடனிருந்தார்.
மாவட்டத்தில் இதுவரை 58 இறந்த தொழிலாளர்களுக்கு ரூ.2.90 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.