/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
/
பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூன் 04, 2025 12:42 AM
சிவகாசி: சிவகாசி வேலாயுதரஸ்தா ரோடு பகுதியில் 30 ஆண்டுகளாக பொது பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டு பாதை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோடு பகுதியில் தனி நபர் 30 ஆண்டுகளாக பொதுப் பாதையை ஆக்கிரமித்து தகர செட், கட்டடங்கள் கட்டியிருந்தனர். மேலும் கேட் அமைத்து பாதையை தடுத்திருந்தனர்.
25 அடி அகலம், 800 அடி நீளத்திற்கு பொதுப் பாதை ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியினர் மற்ற பகுதிகளுக்குச் செல்ல ஒன்றரை கி.மீ., துாரம் சுற்றி சென்று சிரமப்பட்டனர்.
இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கமிஷனர் சரவணன், மாநகர திட்டமிடுநர் மதியழகன் தலைமையில் பொதுப் பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.