/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : ஜன 08, 2025 05:16 AM

சிவகாசி : சிவகாசியில் நாரணாபுரம் ரோடு முனீஸ்வரன் காலனியில் இருந்து நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகள் நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர் .
சிவகாசியிலிருந்து கன்னிசேரி செல்லும் ரோட்டில் நாரணாபுரம் முனீஸ்வரன் காலனியில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த ரோட்டை இருவழி சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியில் விரைவில் துவங்க உள்ளது.
எனவே இப்பகுதியில் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பு தாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் அல்லது துறை ரீதியாக அகற்றப்படும் என நோட்டீஸ் வினியோகம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று நெடுஞ்சாலை துறை சார்பில் நாரணாபுரம் முனீஸ்வரன் காலனியில் இருந்து அரசு சுகாதார நிலையம் வரை ரோட்டில் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைகள், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மணல் அள்ளும் இயந்திரம் மூலமாக அகற்றப்பட்டது.
உதவி கோட்ட பொறியாளர் கூறுகையில், ஐந்தரை மீட்டர் அகலம் உள்ள இந்த ரோடு ஆக்கிரமிப்பால் மேலும் குறுகிவிட்டது.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து இந்த ரோடு ஏழு மீட்டர் அகலப்படுத்தி இரு வழிச்சாலையாக மாற்றும்பணி விரைவில் துவங்க உள்ளது. முதற்கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது, என்றார்.