/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
திருத்தங்கலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : ஜூலை 12, 2025 04:24 AM

சிவகாசி : சிவகாசி மாநகராட்சி திருத்தங்கலில் ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் ரத வீதிகளில் வணிக நிறுவனங்கள்,கடைகள் என ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுஇருந்தது. சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் பணிகள் நடந்து வரும் நிலையில் ரத வீதிகள் முக்கியமாற்றுப் பாதையாக உள்ளது. இதில் தான் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் வாகனங்கள் சென்று வருவதில் பெரிதும் சிரமம் ஏற்பட்டதோடு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தவிர கோயில்களில் விழா காலங்களில் தேரோட்டம் நடைபெறுவதிலும் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.