/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரதவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
ரதவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : மே 21, 2025 06:24 AM

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆண்டாள் கோயில் ரதவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டது. நகரின் அனைத்து ரோடுகளிலும் முழு அளவில் ஆக்கிமிரப்புகளை அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொதுவாக ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவின் போது மட்டுமே ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதும், தேரோட்டம் முடிந்ததும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைப்பதும் பல ஆண்டுகளாக தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்ற தொடர் புகாரின் பேரில் ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.
அதன்படி நேற்று காலை 11:00 மணிக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் ரவி தலைமையிலான குழுவினர் தெற்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். முன்னதாக பெரும்பாலான கடை உரிமையாளர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றி இருந்த நிலையில், அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யகூடாது. மீறினால் மீண்டும் அகற்றுவதுடன் கடும் நடவடிக்கையை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகரில் தேசிய, மாநில, நகராட்சி ரோடுகளில் அதிகரித்து வரும் ஆக்கிரப்புகளை முழு அளவில் அகற்ற வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.