ADDED : ஜன 09, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி, : சிவகாசி என்.ஆர்.கே.ஆர்., ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டது.
சிவகாசி என்.ஆர்.கே.ஆர்., ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை எந்நேரமும் போக்குவரத்து நிறைந்திருக்கும். ரோட்டில் இருபுறமும் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் செட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தள்ளுவண்டி கடைகளும் ஆக்கிரமிப்பு செய்துள்ளது.
முன்னதாகவே தகவல் கூறி இருந்ததால் பெரும்பான்மையான கடைக்காரர்கள் தங்களின் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றினர். ஒரு சில கடைகளில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.