தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஸ்ரீவில்லிபுத்துாரில் அனுமதி இல்லாத பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்

 ஸ்ரீவில்லிபுத்துாரில் அனுமதி இல்லாத பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்

 ஸ்ரீவில்லிபுத்துாரில் அனுமதி இல்லாத பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்


ADDED : பிப் 01, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 34 பிளக்ஸ் போர்டுகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதில் பயணியர் நிழற்குடையில் நின்றிருந்த டூவீலர்களின் டயர்களை நகராட்சி ஊழியர்கள் அரிவாளால் அறுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ராமகிருஷ்ணாபுரம், பஸ் ஸ்டாண்ட், சர்ச் சந்திப்பு, நான்கு ரத வீதிகள் உட்பட பல்வேறு இடங்களில் அனுமதி இல்லாமல் பிளக்ஸ் போர்டு வைக்கும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் சமீப காலமாக வணிக நிறுவனங்களை மறைக்கும் வகையில் பல்வேறு அரசியல் கட்சியினர் பிரம்மாண்ட பிளக்ஸ் போர்டுகளை கட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் மாதம்தோறும் நடக்கும் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் சுகபுத்ரா, பிளக்ஸ் போர்டுகளை அகற்ற உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து நேற்று காலை 8:00 மணி முதல் நகரின் ரத வீதிகள், சர்ச் சந்திப்பு, பஸ் ஸ்டாண்ட், ராமகிருஷ்ணாபுரம் பகுதிகளில் இருந்த அனுமதி இல்லாத 34 பிளக்ஸ் போர்டுகளை நகர அமைப்பு அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் ஊழியர்கள் அகற்றினர்.

இந்நிலையில் சர்ச் சந்திப்பு பயணியர் நிழற்குடையில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள்கள் மற்றும் டூவீலர்களின் டயர்களை நகராட்சி ஊழியர்கள் அரிவாளால் அறுத்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தவறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் அரிவாளால் வாகனங்களின் டயர்களை அறுப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் பிளக்ஸ் போர்டுகளை எந்தவித பாகுபாடும் இன்றி அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us