/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோடை விடுமுறையில் சேதமான பள்ளி கட்டடங்களை சீரமைக்க எதிர்பார்ப்பு
/
கோடை விடுமுறையில் சேதமான பள்ளி கட்டடங்களை சீரமைக்க எதிர்பார்ப்பு
கோடை விடுமுறையில் சேதமான பள்ளி கட்டடங்களை சீரமைக்க எதிர்பார்ப்பு
கோடை விடுமுறையில் சேதமான பள்ளி கட்டடங்களை சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 17, 2025 05:23 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கோடை விடுமுறையில் சேதமான பள்ளி கட்டடங்களை சீரமைக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2021ல் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் சேதமான சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில்மூன்று மாணவர்கள் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு பிறகு அரசு அனைத்து பள்ளிகளிலும் இந்த ஆய்வை செய்ய அறிவுறுத்தியது.
விருதுநகர் மாவட்டத்தில் 190 பள்ளிகள் வரை கண்டறியப்பட்டு அவற்றை சரி செய்ய நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் தேவையற்ற, பயன்படாத, பாழடைந்த நிலையில் உள்ள கட்டடங்களை இடித்தனர். இந்நிலையில் இப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
2024 நவ, டிச. மாதங்களில் பல பள்ளிகளில் கூரைகள் ஒழுகுவதும், சுவர்கள் ஈரப்பதம் ஏறி பாதிப்படைவதும் காணப்பட்டது. இது குறித்து தலைமை ஆசிரியர்கள்கூறினாலும், ஊரக வளர்ச்சித்துறையினர் நேரடி ஆய்வு செய்யாமல் இருந்தனர்.
இது குறித்து சலசலப்பு எழுந்த நிலையில், அப்போதே சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டியபள்ளிகள் குறித்து கணக்கெடுத்தனர். ஜனவரிக்கு பின் தேர்வு மாதம் என்பதால் பெரிய அளவில்பள்ளிகளில் பணிகள் நடக்கவில்லை. துவக்கப்பள்ளிகளில் பணிகள் தொடர்ந்தன.
இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட உள்ளது. மாணவர்களின் நலன் கருதி சேதமான பள்ளி கட்டடங்களை சீரமைக்க வேண்டும். இதே போல் நரிக்குடி, திருச்சுழி போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகள் அருகே சூழ்ந்துள்ள புதர்களால் விஷப்பூச்சிகள் அதிகம் உலவுகின்றன. இதை பார்க்கும் மாணவர்கள் அலறியடித்து ஓடும் சூழல் உள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பான கல்வி சூழல் என்பது அவசியம். பொதுவாக கோடை விடுமுறை விட்டு விட்டால், கடைசி வாரத்தில் தான் ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் பள்ளிகளில் துாய்மை பணி செய்யப்படும். அவர்கள் வழக்கம் போல், புதர்களை அகற்றாமல் விட்டு விடுவர். நிறைய பள்ளி சுகாதார வளாகங்கள் விஷப்பூச்சிகளில் வசிப்பிடமாக உள்ளன.
எனவே மாவட்ட நிர்வாகம் சேதமான பள்ளிக் கட்டடங்களை சரி செய்யவும், புதர்மண்டிய பகுதிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.