தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

 மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

 மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்


ADDED : ஜன 27, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 05:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 77வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று காலை 8:15 மணிக்கு தேசிய கொடியேற்றி வைத்த கலெக்டர் சுகபுத்ரா, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று மூவர்ண பலுான்களை பறக்க விட்டார்.

இதனை தொடர்ந்து எஸ்.பி., கண்ணன் வரவேற்றார். சிறப்பாக பணியாற்றிய 169 தலைமை கான்ஸ்டபிள்களுக்கு முதல்வர் போலீஸ் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார். மேலும் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.2லட்சம் மதிப்பில் போர் கைம்பெண் கருணைத்தொகை, ஒரு பயனாளிக்கு ரூ.25 ஆயிரம் போரில் ஊனமுற்றமைக்கான பராமரிப்பு மானியத்தையும் வழங்கினார்.

அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்களுக்கும், முன்னோடி மாவட்டமாக திகழ பங்களிப்பை வழங்கிய 19 மாவட்ட அலுவலர்கள், முதல்வர் நிவாரண நிதிக்கு தனது சிறு சேமிப்பு தொகையை வழங்கிய பள்ளி மாணவர், மாநில கலைத்திருவிழா போட்டியில் வென்ற 34 மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கினார்.

மேலும் சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளர், 2 சிறந்த மகளிர் சுயஉதவிக்குழுக்கள், 2 சிறந்த தன்னார்வ கொடையாளர்கள், 2 சிறந்த அங்கன்வாடி பணியாளர்கள், 2 சிறந்த அங்கன்வாடி உதவியாளர்கள், 2 சிறந்த சத்துணவு பணியாளர்கள், 2 சிறந்த திருநங்கைகள். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பாக பணிபுரிந்த 12 பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், தீயணைப்பு மீட்புத்துறையில் 3 பணியாளர்கள் என மொத்தம் 293 பேருக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார். இதில் டி.ஆர்.ஓ., ஆனந்தி, திட்ட இயக்குனர் கேசவதாசன், சிவகாசி சப் கலெக்டர் முகமது இர்பான் பலர் பங்கேற்றனர்.

* மதுரை அருப்புக்கோட்டை ரோடு டி.வி.ஆர்., நகர் கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நிகழ்ச்சி குழு தலைவர் மீனாட்சி கொடியேற்றினார். உடற்கல்வி ஆசிரியர்கள் சக்தி பிரகாஷ், தசரதி, பள்ளி ஊழியர்கள் செல்வகுமார், சரவணன், சுயம்பையா, ஹரிகிருஷ்ணன், அமுதா பங்கேற்றனர்.

* ஆர்.எல்.ஐ.என்.எஸ்., கல்லுாரியில் முதல்வர் பாலன் முத்துராமலிங்கம் தலைமை வகித்து கொடியேற்றினார். மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

* விருதுநகர் தினமலர் அலுவலகத்தில் கொடி யேற்றப்பட்டது. ஊழியர்கள் மரியாதை செலுத்தினர்.

* அரசு போக்குவரத்து கழகத்தில் பொது மேலாளர் கோபால கிருஷ்ணன் கொடி ஏற்றினார். ஊழியர்களுக்கும், அவரது குழந்தைகளுக்கும் இனிப்பு வழங்கினார்.

* நகராட்சி அலுவலகத்தில் தலைவர் மாதவன் கொடி ஏற்றினார். நகராட்சி கமிஷனர் விஜயகுமார் உள்பட ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

* பா.ஜ., அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் கொடி ஏற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

* விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்பக்கல்லுாரியில் தலைவர் முரளிதரன் தலைமை வகித்து கொடி ஏற்றினார். முன்னாள் மாணவரும் நிறுவன முதன்மை பொறியாளர் தினேஷ்குமார் விஸ்வாசம் உள்பட நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

* விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் முதல்வர் சாரதி வரவேற்றார். உப தலைவர் டெய்சிராணி கொடி ஏற்றினார். கல்லுாரி தலைவர் சம்பத்குமார், உப தலைவர் ராமசாமி, செயலாளர் மகேஷ்பாபு, பொருளாளர் குமரன் உள்பட நிர்வாகிகள், பேராசிரியர் பலர் பங்கேற்றனர். என்.சி.சி., என்.எஸ்.எஸ்., ஜே.ஆர்.சி., செஞ்சுருள் சங்கம், உடற்கல்வித்துறை மாணவர்களின் அணி வகுப்பு நடந்தது.

* விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லுாரியில் மானேஜிங் போர்டு தலைவர் மோகன் தலைமையில் கொடி ஏற்றினார்.

ஸ்ரீவில்லிபுத்துார் ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் கொடியேற்றினார். விழாவில் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.

* நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் ரவி கண்ணன் கொடியேற்றினார். துணைத் தலைவர் செல்வமணி, கமிஷனர் குமார், நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

* லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அரிமா சங்கத் தலைவர் குணசேகரன் கொடியேற்றினார். விழாவில் பள்ளி தாளாளர் வெங்கடாசலம், முதல்வர்கள் சுந்தர மகாலிங்கம், சிவக்குமார், துணை முதல்வர்கள் முகமது முகைதீன், பாண்டீஸ்வரி, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பள்ளி அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

* கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நாராயணன் கொடியேற்றினார். விழாவில் துணைவேந்தர் ஸ்ரீதரன், துணை தலைவர் சசி ஆனந்த், பதிவாளர் வாசுதேவன், முதல்வர்கள், டீன்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

* ஒயிட் பீல்டு மழலையர் துவக்கப் பள்ளியில் முதல்வர் வனிதா கொடியேற்றினார். விழாவில் ஒருங்கிணைப்பாளர் சுமதி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

* வள்ளுவர் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் சிவகுமாரன் கொடியேற்றினார். நிர்வாக அலுவலர் சந்தானம், கல்வி ஆலோசகர் சரவண ராஜன், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

* மகரிஷி வித்யா மந்திர் மழலையர் பள்ளியில் முதல்வர் சிவப்பிரியா கொடியேற்றினார். மகரிஷி சி.பி.எஸ்.இ. பள்ளியில் வழக்கறிஞர் ரமேஷ் கொடியேற்றினார். தாளாளர் குருவலிங்கம், நிர்வாக அலுவலர் சித்ரா மகேஸ்வரி, முதல்வர் ராமநாதன், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

* வத்திராயிருப்பு ரங்காராவ் லயன்ஸ் பெண்கள் பள்ளியில் டாக்டர் பால்சாமி கொடியேற்றினார். விழாவில் பள்ளி தலைவர் சுந்தரராஜ பெருமாள், தாளாளர் விஜயகுமார், தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, அரிமா சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

* எஸ்.என்.எஸ் யோகா மையத்தில் மாஸ்டர் சமுத்திர ராஜ் கொடியேற்றினார்.

ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் முதல்வர் கணேசன் கொடியேற்றினார். துணை முதல்வர் ராஜ கருணாகரன் பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். என்.சி.சி மாணவர்கள் அணிவகுப்பு நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

* ராஜூக்கள் கல்லுாரியில் முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் கொடியேற்றினார். என்.சி.சி மாணவர்கள் அணிவகுப்பு நடந்து. மினி மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் முத்துக்குமார் செய்திருந்தார்.

* பி.ஏ.சி.எம் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மாரிமுத்து கொடியேற்றினார். உதவி தலைமை ஆசிரியர் கருணாகரன், என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் கணேசன், ஆசிரியர்கள் கார்த்திகேயன், பார்த்திபன் மாணவர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடந்து போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

* ந.அ. அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி செயலர் சுதர்சன் ராஜூ தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ரமேஷ் கொடியேற்றினார். விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.

* கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைமா கல்வி குழும தலைவர் திருப்பதி செல்வன் தேசிய கொடி ஏற்றினார். முதுநிலை முதல்வர் அருணா தேவி முன்னிலை வகித்தார்.

* நாடார் மேல்நிலைப் பள்ளியில் உறவின்முறை தலைவர் வேல்ராஜன் கொடியேற்றினார். பள்ளிச் செயலர் அழகர் ராஜன், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ் மெட்ரிக் பள்ளி செயலர் கண்ணன், உறவின்முறை பொருளாளர் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

* ராஜபாளையம் ஸ்ரீ ராமலிங்க விலாஸ் ஜெயராம் துவக்கப்பள்ளியில் செயலர் பாலசுப்பிரமணியன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் மகேஸ்வரி வரவேற்றார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கவுன்சிலர் ராதா பரிசு வழங்கினார். ஆசிரியை மாடத்தி நன்றி கூறினார்.

* ராஜபாளையம் சேத்துார் சேவுக பாண்டிய அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் முருகன் கொடியேற்றினார். உதவி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் வரவேற்றார்.

* தேவதானம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை ராசாத்தி கொடி ஏற்றினார். சமூக ஆர்வலர் சேகர் பங்கேற்றார். ஏற்பாடுகளை ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் செய்திருந்தார்.

* சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனி குரு மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் நிறுவனர் ஆறுமுகம் கொடியேற்றினார். முதல்வர் நாகலட்சுமி, பேராசிரியர்கள் அலுவலர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

* சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனி குரு மாடர்ன் சி.பி.எஸ்.இ பள்ளியில் தாளாளர் பழனி குரு கொடியேற்றினார். முதல்வர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார் ஆலோசகர் சித்ராதேவி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

* சத்திரப்பட்டி மொட்டமலை பாலகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் தாளாளர் மாடசாமி தலைமை வகித்தார். கல்லுாரி செயலர் டாக்டர் சுரேஷ் கொடியேற்றினார். முதல்வர் கீதா, நிர்வாகி சாந்தி, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

* ராஜபாளையம் நகர் காங்., சார்பில் நேரு பவனத்தில் நடந்த குடியரசு நிகழ்ச்சியில் நகர் தலைவர் சங்கர் கணேஷ் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் ராஜ்மோகன் கொடியேற்றினார். காங். கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

* தர்மாபுரம் காந்திஜி வாசக சாலையில் சக்க ராஜா கோட்டை ராஜூக்கள் தலைவர் சின்ன வெங்கட்ட ராஜா கொடியேற்றினார். செயலாளர் தர்மலிங்க ராஜா, தலைவர் டாக்டர் சுப்பிரமணியம், துணைத் தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் பொன்விழா மைதானம் சுதந்திர தின வளைவில் நடந்த நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முத்து செல்வம் கொடியேற்றினார். டைகர் சம்சுதீன், என்.சி.சி அதிகாரி ஜெகநாத், ஓய்வு ராணுவ வீரர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அருப்புக்கோட்டை நகராட்சியில் தலைவர் சுந்தரலட்சுமி கொடியேற்றினார். கமிஷனர் ராஜமாணிக்கம், துணைத் தலைவர் பழனிச்சாமி, முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், திமுக நகர செயலாளர் மணி மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் துணை தாசில்தார் ஜாஸ்மின் கொடியேற்றினார் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் அருப்புக்கோட்டை கூடுதல் மாவட்ட நீதிபதி வசந்தகுமார் கொடி ஏற்றினார். சார்பு நீதிபதி சதீஷ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆனந்தவள்ளி, குற்றவியல் நீதிபதி ஜெயப்பிரதா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவரஞ்சனி மற்றும் வக்கீல்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* அருப்புக்கோட்டை வட்டார கல்வி அலுவலகத்தில் ஏ. இ.ஓ., சிவக்குமார் கொடியேற்றினார். ஏ. இ.ஓ., ராமலட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* அருப்புக்கோட்டை டவுன் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் கொடி ஏற்றினார்.

* அருப்புக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ அதிகாரி முருகேஸ்வரன் கொடியேற்றினார். டாக்டர்கள் ஜெகமணி, அண்ணாதுரை, சந்திரமௌலி, மேட்ரன் லதா மற்றும் செவிலியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பார்மசிஸ்ட் மணிசங்கர் நன்றி கூறினார்.

* வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளர் மாணிக்கம் கொடியேற்றினார்.

* அருப்புக்கோட்டை சௌடாம்பிகா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் நிர்வாக குழு தலைவர் முருகேசன் கொடியேற்றினார். பொருளாளர் ராஜேந்திரன், செயலாளர் வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தனர். முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

* அருப்புக்கோட்டை ஆ. கல்லுப்பட்டி சித்தி விநாயகர் இந்து துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை சரளாதேவி கொடியேற்றினார். உதவி ஆசிரியை குணவதி நன்றி கூறினார்.

* அருப்புக்கோட்டை மினர்வா பப்ளிக் பள்ளியில் தாளாளர் கண்ணன் கொடியேற்றினார். ஒருங்கிணைப்பாளர் வெங்கடசாமி முன்னிலை வகித்தார். முதல்வர் வேணி வரவேற்றார். மாணவ மாணவியர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது.

* அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியில் செயலர் ஆசைதம்பி கொடியேற்றினார். நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். முதல்வர் ராதா வரவேற்றார். கல்லூரி தலைவர் மயில் ராஜன் மற்றும் நிர்வாக குழுவினர் கலந்து கொண்டனர்.

* அருப்புக்கோட்டை ரமணாஸ் கலை கல்லூரியில் சேர்மன் ராமச்சந்திரன் கொடியேற்றினார். பி.எட்., கல்லூரியில் முதல்வர் ராஜேந்திரன் கொடியேற்றினார். கலைக்கல்லூரி செயலர்கள் டாக்டர் இளங்கோவன், சங்கர நாராயணன் முன்னிலை வகித்தனர்.

* எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைவர் ஜெய்கணேசன் கொடியேற்றினார். செயலர் காசிமுருகன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் வரவேற்றார்.

* எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உறவின்முறை துணை செயலர் பாலசுப்பிரமணியன் கொடியேற்றினார். செயலாளர் செயலர் ராம்குமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை தங்கரதி வரவேற்றார்.

* எஸ்.பி.கே., ஜூனியர் பள்ளியில் உறவின்முறை பொருளாளர் கனகராஜ் கொடியேற்றினார். பள்ளிச் செயலர் ரமேஷ் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சிவகாசி விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திருத்தங்கல் கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேசியக்கொடி ஏற்றி, இனிப்பு வழங்கப்பட்டது.

* சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சங்கீதா தேசியக்கொடி ஏற்றினார். கமிஷனர் சரவணன் முன்னிலை வகித்தார். சிறப்பாக பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி கமிஷனர் வரலட்சுமி, பொறியாளர் ராமலிங்கம் உதவி பொறியாளர்கள் ரமேஷ், அழகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் ஸ்ரீதேவி, சுகாதார அலுவலர்கள் சுரேஷ், திருப்பதி, சத்யராஜ், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் முதல்வர் சுதா பெரியதாய் தேசிய கொடி ஏற்றினார். மாணவி விக்னேஸ்வரி வரவேற்றார். மாணவி இந்துராணி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். முதுகலை , ஆங்கில ஆய்வுத்துறை தலைவர் முத்தமிழ் செல்வி பேசினார். மாணவி முத்து ஸ்ரீ நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் மங்கையர்கரசி, ஜோஸ்பின் ஸ்டெல்லா, தேசிய மாணவர் படை திட்ட அலுவலர் பானுமதி, மாணவர் பேரவை பேராசிரியர்கள் செய்தனர்.

* சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் கல்லுாரி தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். கல்லுாரி டீன் மாரிசாமி தேசியக்கொடி ஏற்றினார். தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு நடந்தது. மாணவர்கள், பேராசிரியர்கள் குடியரசு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தேசிய மாணவர் படையின் வருடாந்திர பயிற்சி முகாமில் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் மாணவர்களுக்கு தரம் கொடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம் உடற்கல்வித்துறை பேராசிரியர் சுந்தரமூர்த்தி, தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், கல்லுாரி பேராசிரியர்கள் செய்தனர்.

* சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் சிவகாசி ரெட்போர்ட் பைவ் ஹில்ஸ் பட்டாசு தொழிற்சாலைகள் இயக்குனர் மணிகண்டன் கொடி ஏற்றினார். மாணவி செல்வ பாரதி வரவேற்றார். கல்லுாரி செயலர் செல்வராஜன் தலைமை வகித்தார். முதல்வர் பாலமுருகன் தேசிய உறுதிமொழியும், துணை முதல்வர் முத்துலட்சுமி தேசிய இளைஞர் தின உறுதிமொழியும், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மாரீஸ்வரன் தேசிய வாக்காளர் தினத்திற்கான உறுதி மொழியையும் வாசித்தனர். மாணவிகள் விஜயலட்சுமி, லக்ஷன்யா பேசினர். தேசிய மாணவர் படை அணிவகுப்பு நடந்தது. மாணவன் ஹரிஹரன் நன்றி கூறினார்.

* காக்கிவாடன்பட்டி ஆர்.பொன்னுச்சாமி நாயுடு கல்வியியல் கல்லுாரி, கே.ஆர்.பி. கலை அறிவியல் கல்லுாரியில் கல்லுாரி தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். கலை கல்லுாரி முதல்வர் ராம் ஜெயந்தி முன்னிலை வகித்தார். கல்வியியல் கல்லுாரி முதல்வர் கண்ணன் தேசியக்கொடி ஏற்றினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

* சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் விஜயராணி தேசிய கொடி ஏற்றினார்.

* சாத்துார் மேட்டமலை கிருஷ்ணசாமி கலை அறிவியல் கல்லுாரி, பி.எஸ்.என்.எல்., கல்வியியல் கல்லுாரிகளில் நடந்த குடியரசு தின விழாவில் கல்வி குழுமம் தலைவர் ராஜு தேசியக்கொடி ஏற்றினார். கல்லுாரி துணைத் தலைவர் பாப்பா, செயலாளர் முத்துக்குமார் தலைமை வகித்தனர். கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சுப்புராஜ், கல்வியியல் கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி பேசினர். இரு கல்லுாரிகளின் பேராசிரியர்கள், மாணவர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாக அலுவலர் மாரிகாளை செய்தார்.

* சிவகாசி ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் சிவகாசி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி சுமிதா தேசியக்கொடி ஏற்றினார். பள்ளி தாளாளர் ஜெயக்குமார் வரவேற்றார். தலைமை முதல்வர் பாலசுந்தரம், முதல்வர்கள் அம்பிகா தேவி, ஞான புஷ்பம் பேசினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முதல்வர் லதா, துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் கொடியேற்றினார். எஸ்.ஐ.கள் முத்துராமலிங்கம், கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்புக் குழு சார்பாக வட்டார தலைவர் ஜெயக்குமார் கொடியேற்றினார். உறுப்பினர்கள் சிவசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். மல்லாங்கிணரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கொடியேற்றினார். காரியாபட்டி லயன்ஸ் கிளப் சார்பாக வட்டார தலைவர் அழகர்சாமி கொடியேற்றினார். தலைவர் ராமசாமி, செயலாளர் மணிகண்டன், துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், முன்னாள் செயலாளர் விக்டர், குயின்ஸ் தலைவர் உமாதேவி, செயலாளர் கவுரி உட்பட பலர் கலந்து கொண்டனர். நீதிமன்றத்தில் நீதிபதி யோகேஸ்வரன் கொடியேற்றினார். சங்கத் தலைவர் அக்னி தேவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரியில் குடியரசு தின விழா கல்லுாரி துணைச் செயலாளர் சீனிவாசன் தேசியக்கொடி ஏற்றினார்.முதல்வர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார்.என்.சி.சி மாணவர்கள் அணிவகுப்பு நடந்தது.பொருளாளர் பத்மநாபன் பேசினார்.பேராசிரியர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.

* சாத்துார் மேட்டமலை பி.எஸ்.என்.எல்.பி.எட்., கல்லுாரி, ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் கல்லுாரி தலைவர் ராஜீ தேசியக்கொடி ஏற்றினார்.துணைத் தலைவர் பாப்பா ராஜீ, செயலாளர் முத்துக்குமார், முதல்வர் ராஜேஸ்வரி, கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் சுப்புராஜ், நிர்வாக அலுவலர் மாரிக்காளை, பேராசிரியர்கள் அலுவலர்கள், மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

* சாத்துார் டி.எஸ்.பி. அலுவலகத்தில் டி.எஸ்.பி. நாகராஜன் கொடி ஏற்றினார்.

* கோவில்பட்டி நேஷனல் பொரியல் கல்லூரியில் மதுரை தேசிய மாணவர் படை ஏழாவது தமிழ்நாடு பிரட்டாலியன் கமாண்டிங் அதிகாரி கர்னல் வி. சிவக்குமார் தேசியக் கொடி ஏற்றினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கல்லுாரி தலைவர், தாளாளர், நிர்வாக குழு உறுப்பினர்கள், முதல்வர்கள் , பேராசிரியர்கள் அலுவலர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us