ADDED : பிப் 10, 2026 06:07 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் சுகபுத்ராவிற்கு, ம.நீ.ம., மாவட்ட செயலாளர் காளிதாஸ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் தற்போது ரூ.1.38 கோடியில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இங்குள்ள கழிப்பறை கூரை இடிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடியும் வரை பயணிகளின் நலனிற்காக தற்காலிக கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும். வாகன காப்பாகத்தின் தரைதளம் சேதம், இடப்பற்றாக்குறை உள்ளது. வாகன காப்பகம் விரிவுப்படுத்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
